மூன்று தடவைகள் மாகாணசபையில் இருந்த அனுபவம் உங்களிடம் இருந்துள்ளது.அதேபோன்று பிரதேசசபையில் தவிசாளராகவும் இருந்துள்ளீர்கள் இந்த நிலையில் தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ளது கிழக்கு மாகாணசபையில் எதிர்காலத்தில் எவ்வாறான பணியை முன்னெடுக்கவுள்ளீர்கள் எனக்கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாணத்தில் 40வீதம் தமிழர்கள்,37முஸ்லிம்கள்,23வீதம் சிங்களவர்கள் உள்ளனர்.இதன் காரணமாக மூன்று இனங்களினதும் அனுசரணையுடன் கிழக்கு மாகாணசபை செயற்படவேண்டும்.
கடந்த காலத்தில் (போராட்ட காலத்தில்)உறுதியாகவும் தெளிவாகவும் எடுக்கப்பட்ட முடிவுகள் கொள்கை ரீதியாக சரியாக இருந்தாலும் தமிழ் சமூகம் சில விடயங்களில் நன்மையடைந்துள்ளபோதிலும் பல இழப்புகளை சந்தித்துள்ளதை யாரும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது.
கல்வி, உள்ளுராட்சி, விவசாயம்,சட்டம் ஒழுங்கு,நிதி,நியமனம்,பொதுவான அபிவிருத்தி திட்டம்,அதிகார பங்கீடு போன்ற விடயங்கள் மத்தி, மாகாண ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்டு ஒருபக்கசார்பாகவே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தமிழ் சமூகம் பல பாதிப்புகளை எதிர்கொண்டது.
தற்சமயம் இது தொடருமானால் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வாழ்நிலை கேள்விக்குறியாகும் நிலையேற்படும் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.
இதனை ஈடுசெய்வதற்கு அதிகார பங்கீடு தொடர்பாக ஒரு செயற்பாட்டை முன்னெடுத்துக்கொண்டு அதேநேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தினை கைலெடுப்பதற்கான செயற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.இதில் ஒவ்வொரு நிமிடமும் தாமதிக்கும் பட்சத்தில் தமிழர்களுக்கு நிமிடங்களுக்கு இழப்புகளை சந்திக்கவேண்டிய நிலையேற்படும்.
கடந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான கோரிக்கையினை தலைவர் அவர்கள் விடுத்தும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.
தற்சமயம் ஏற்பாட்டுள்ள ஆட்சிமாற்றத்தினை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சிமாற்றம் ஒன்றிணை ஏற்படுத்தவேண்டும்.
வீதாசார அடிப்படையிலும் எமது மாகாணசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் இனங்களுக்கிடையே ஐக்கியத்தினை ஏற்படுத்தியதான ஆட்சிமுறை ஒன்றை ஏற்படுத்தவேண்டும்.
