சவுக்கடி வீதி புனமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சவுக்கடி பிரதான வீதியில் புனரமைக்கப்படாத நிலையில் இருந்து இருநூறு மீற்றர் தூரமான வீதி கொங்கிறீட் இடப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது.


கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த வீதி கொங்கிறீட் இடப்பட்டுள்ளது.

சவுக்கடி-ஏறாவூர் உள் பிரதான வீதி கடந்த காலத்தில் புனரமைக்கப்பட்டபோதிலும் 200 மீற்றர் தூரமான பகுதி புனரமைக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 20இலட்சம் ரூபா விசேட ஒதுக்கீட்டின் மூலம் இந்த வீதி கொங்கிறீட் இடப்பட்டுள்ளது.

இதனை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று பிற்பகல் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.