அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வு

(லியோன்)     

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு மார்கழி மாதத்தில் ஒளிவிழா கொண்டாட்டங்கள்  இடம்பெற்று  வரும்  வேளையில் மட்டக்களப்பு அமிர்தகழி கருணை  பாலர் பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வு அமிர்தகழி சித்தி விநாயகர் மகா வித்தியாலய  மண்டபத்தில் நடைபெற்றது.


இவ்  ஒளிவிழா நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு வலயக் கல்வி முன்பள்ளி உதவிக் கல்வி பணிப்பாளர் எம் .புவிராஜ், அருட்பணி ரஜீவன் ,அருட்பணி  ரமேஷ் , பாலமீன் மடு பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி மற்றும் மாமாங்கம் இலங்கை வங்கி கிளை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்  ஒளிவிழா நிகழ்வில் இப் பாடசாலை சிறார்களின் கலை நிகழ்வுகள்   இடம்பெற்றதோடு, இப்  பாலர் பாடசாலையில்  கல்வி கற்று  அடுத்த ஆண்டு  பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும்  பதக்கங்கள்  அணிவிக்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டனர்.

இறுதி நிகழ்வாக பிரதம விருந்தினர்களின் சிறப்பு ஒளிவிழா உரைகளோடு,நத்தார்  தாத்தாவின் ஆடல்,பாடல் மற்றும் பரிசுகள்  வழங்கப்பட்டு  ஒளிவிழா  இனிதாக  நிறைவு பெற்றது .