மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒளிவிழா

(லியோன்)   

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்கதினால் நடத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்வு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .


இந்நிகழ்வில்  உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா ,புனித மரியாள் பேராலய பங்குதந்தை அருட்பணி ஜே .எஸ் .மொறாயஸ் ,கொஸ்பில் வேள்ட் மினிஸ்ரி வணபிதா அந்தோனிதாஸ் சில்வஸ்டர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர் .

இன்று இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில்  நத்தார் தின விசேட நற்செய்திகளும் ,பாரதசேத்திரா மாணவ குழுவினரின் நடன நிகழ்வுகளும் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கரோல் கீதங்களும் இடம்பெற்றதுடன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் கல்வி பயிலும் வறிய  மாணவர்களின் தெரிவு செய்யப்பட 200 மாணவர்களுக்கு பாடசாலை அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டது .
இறுதி நிகழ்வாக நத்தார் தாத்தாவினால் பரிசில்கள் வழங்கப்பட்டு நிகழ்வு இனிதாக நிறைவு பெற்றது .