மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் கற்கைகளுக்கான மாணவர்களை அதிகளவில் உள்வாங்கும் வகையில் புதிய முறையிலான உத்தி ஒன்றும் விழிப்புணர்வூட்டும்நடவடிக்கையும் இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
நிறுவகத்தின் கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வூட்டும் நடவக்கையின் போது நிறுவகத்தின் விரிவுரையாளர்கள், தற்போதைய மாணவர்கள், பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது, கற்கும், கற்ற மாணவர்களுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதன் பின்னர், மாணவர்கள் பிரதான வீதியில் பஸ் மற்றும் வாகனங்களில் போக்குவரத்துச் செய்தவர்களுக்கு பிரசுரங்கள் வழங்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன.
உயர்தரம் கற்று பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டும் அனுமதி கிடைக்காத மாணவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படுகின்ற உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா, உயர் தேசிய பொறியியல் டிப்போமா என 14க்கும் மேற்பட்ட கற்கைகள் முழுநேர, பகுதி நேரங்களாக கற்பிக்கப்படுகின்றன.
மட்டக்களப்பில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா ஆகிய கற்கைகள் எதிர்வரும் வருடம் முதல் முழுநேர, பகுதி நேரங்களாக கற்பிக்கப்படவுள்ளன.
உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் பாடநெறிகளைக் கற்பதன் மூலம் தேசிய ரீதியில் கணக்காளர் தரத்திNலூ பொறியல் தரத்திலோ தாராதரத்தினை உயர்த்திக் கொள்ள முடியும் எனவும் மட்டக்களப்பு கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.
அதே நேரம், தற்போது 450 வரையான மாணவர்கள் கற்று வருவதாகவும் எதிர்வரும் வருடத்தில் 650க்கும் அதிகமானவர்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கும் அவர், இந்த வருடத்தில் 100 பட்டதாரிகள் வெளியேறியுள்ளதாகவும் எதிர்வருமு; வருடத்தில் புதிய கட்டடத் தொகுதி விடுதி வசதிகளுடன் நடைபெறும் பயிற்சிகளில் Nமுலும் அதிகமானவர்கள் சிறந்த பெறுபேற்றுடன் வெளியேறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
நடைபெறும் விழிப்புணர்வூட்டும் பிரச்சாரப்படுத்தும் செயற்பாட்டின் மூலம் மாவட்டத்தின் கல்வி வளத்தினை விரிவு படுத்தி அதிக மாணவர்கள் கற்கின்ற தன்மையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே எதிர்வரும் ஆண்டில் உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா ஆகியவற்றைக் கற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.