போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர்களான பொன்.ரவீந்திரன், ருத்திரமலர் ஞானபாஸ்கரன் , ஊடக இணைப்பாளர் ஜீவானந்தம், போரதீவுப்பற்று பிரதேச வாழ்வின் எழுச்சி திணைக்கள முகாமையாளர் உதயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது திவிநெகும திட்டத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகள் ஈடுபடுவோருக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் முட்கம்பிகளும் வழங்கிவகை;கப்பட்டன.
அத்துடன் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டதுபோன்று சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளுக்கான மேலதிக கொடுப்பனவுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
திக்கோடை பிரதேசத்தினை சேர்ந்த 1150 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 2500 ரூபா வீதம் சுமார் 28 இலட்சம் ரூபா வழங்கிவைக்கப்பட்டது.