மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்-சிங்கள மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்கான வழியை ஜனாதிபதியே ஏற்படுத்தியதாகவும் இங்கு பிரதியமைச்சர் தெரிவித்தர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலேயே மீள்குடியேற்ற பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை ஆதரித்து மட்டக்களப்பின் எல்லைப்பகுதியான மங்கலகமவில் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.
கல்குடா தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் சந்திரபாலவின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியினை ஆதரித்த பெருமளவிலான உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் ஜனாதிபதிக்கு நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் இதுவாகும்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்,
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டில் நடைபெற்ற 25க்கும் மேற்பட்ட தேர்தலில் தோல்வி கண்டவர்.அவருடன் இணைந்துள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்சியும் இல்லை.ஒரு கொள்கையும் இல்லை.இவரால் இந்த நாட்டில் ஸ்திரமான ஆட்சியை ஏற்படுத்தமுடியாது.
இந்த நாட்டில் துணிச்சலுடன் உறுதியுடன் செயற்படக்கூடிய தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மட்டுமே இதனை எமது மக்கள் உணரவேண்டும்.
இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தினைக்கொண்டுவர சர்வதேச சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.இன்று பல நாடுகளில் குழப்ப நிலையை ஏற்படுத்த முனைந்தவர்களே இலங்கையிலும் மீண்டும் இரத்தக்களறியை ஏற்படுத்த முனைகின்றனர்.
சர்வதேச ரீதியில் உள்ள புலிகளைக்கொண்ட வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த நாட்டில் யுத்தம் ஒன்றினை ஏற்படுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஈடுபட்டுவருகின்றார்.அவரின் கூட்டணியினரும் இதனையே விரும்புகின்றனர்.
கடந்த 30வருடகாலமாக இந்த நாட்டில் இடம்பெற்றுவந்து யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் மிகவும் நிம்மதியாக வாழ்ந்துவருகின்றோம்.இந்த நிலையை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவாகும்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து எமது மக்களுக்கு தேவையான வளங்களை நாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.