கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு

சர்வதேச மனித உரிமைகள் தினம் மனிதனின் சுதந்திரம் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் உருவாக்கப்பட்ட இத்தினத்தில் உலகலாவிய ரீதியில் பல இடங்களில் வைபவங்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.


மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிறுவனமும் “மனித மாண்புகளை மதிப்போம் மனித உரிமைகளைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மனித உரிமைகள் தின சிறப்பு நிகழ்வினை புதன்கிழமை மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை ஜெறோன் டி லிமா அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடாத்தியது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் கலந்து கொண்டதுடன் மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராசா, மட்டக்களப்பு பெண்களின் தேவைகளுக்கான அமைப்பின் இணைப்பாளர் திருமதி சங்கீதா தர்மரஞ்சன், மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் எ.சி.எ அஸீஸ், மட்டக்களப்பு இளைஞர் சேவைகள் மன்ற உதவி இயக்குனர் எம்.எல்.எம்.என். நைறூஸ், சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் செயலாளர் பப்டிஸ் பெனான்டோ, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் மனித உரிமைகள் பற்றி சிறப்புரை நிகழ்த்தப்பட்டதுடன் கரிதாஸ் எகெட் அமைப்பினால் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.