மணற்பிட்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணற்பிட்டி பகுதியில் உள்ள மரம் ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மண்பிட்டி பகுதியில் உள்ள மரம் ஒன்றில் இருந்தே இவர் மீட்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்டவர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடாவை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான க.ருத்திரமூர்த்தி(40வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.