பிரித்தானியாவில் கால்பந்து மோதி மட்டக்களப்பு சிறுவன் உயிரிழப்பு

பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கை மட்டக்களப்பை சேரந்த சிறுவனொருவன் கடந்த வியாழக்கிழமை (11)கால்பந்து மோதி உயிரிழந்துள்ளான்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தினை சேர்ந்த ஜெயக்குமார் சுஜி எனும் 14 வயது மாணவன் பாடசாலையில் விளையாடிக்கொண்டிருந்த போது, வயிற்றில் கால்பந்து பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

எனினும் சிக்ச்சை பலனளிக்காத நிலையில் ஒரு நாளின் பின்னர் சிறுவன் மரணமடைந்துள்ளார்.