மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர் ஒருவர் கதிரி இயக்குனரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (16)மாலை 7.00மணியளவில் ஹாந்தி என்ற பெரும்பான்மையினத்தை சேர்ந்த பெண்னே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
சுகாதார உதவியாளரின் கடமைக்கு அப்பால் வேலைசெய்யுமாறு கதிரி இயக்குனரால் கேட்கப்பட்டபோது மறுப்புத்தெரிவிக்கப்பட்டபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கவனத்துக்கு கொண்டுசென்றபோதிலும் சுமார் ஒரு மணித்தியாலத்தினை கடந்த நிலையிலும் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வருகைதரவில்லையெனவும் தெரிகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலும் முறையிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிகிறது.
இது தொடர்பில் கருத்தினைப்பெறுவதற்கு கதிரி இயக்குனரையும் தொடர்புகொள்ளமுயற்சித்தபோதிலும் அவரின் தொடர்பினை பெறமுடியவில்லை.
