வவுணதீவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அலுவலகம் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவினைபெற்றுக்கொடுக்கும் வகையில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டுவருகின்றன.


இதன் கீழ் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மட்;டக்களப்பு மாவட்ட தற்போதைய இணைப்பாளரும் கடந்த முறை ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு மாகாணசபை தேர்தலின் வேட்பாளருமான ஆறுமுகம் ஜெயக்குமார் தலைமையில் இந்த அலுவலக திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மகநெகு நிகழ்ச்சி திட்டத்தின் தலைவரும் கிழக்கு மாகாண ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் இணைப்பாளருமான கிங்ஸ்லி ரணவக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுணதீவு சில ஆதரவாளர்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர்.

இந்த அலுவலக திறப்பு விழாவில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் இசை நிகழ்வும் நடத்தப்பட்டது.