அமரத்துவமடைந்த முனைவர் மீரா வில்லவராயர் அவர்களுக்கு பட்டிருப்புக் கல்வி வலய இசையாசிரியர்கள் சங்கத்தினர் தங்களது அஞ்சலியைத் தெரிவித்துள்ளனர்.
தேசிய கல்வி நிறுவகத்தில் அழகியல் கல்விப் பிரிவின் முன்னாள் பிரதம செயற்திட்ட அதிகாரியாக பணிபுரிந்த முனைவர் மீரா வில்லவராயர் அமரத்துவம் அடைந்த செய்திகேட்டுப் பட்டிருப்புக் கல்வி வலய இசையாசிரியர்கள் சங்கம் பேரதிர்ச்சியுறுகிறது, அன்னாரது இழப்பு இலங்கை தமிழ் பேசும் இசையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
கர்நாடக இசைத்துறையில் (பீ.ஏ.) (எம்.ஏ.) (பி.எச்.டி) எனப் பல பட்டங்களை தன்னகத்தே கொண்ட முஐனவர் மீரா வில்லவராயர் அவர்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் மூலம் நாடெங்கிலுமுள்ள அனைத்துத் தமிழ் பேசும் இசை உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்களை இசை வாண்மையுள்ளவர்களாகப் பயிற்றுவித்து அதன்மூலம் சகல இசையாசிரியர்களையும் நெறிப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இசை சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் நன்மை கருதி பல வகைப்பட்ட இசை நூல்களை எம் கரங்களில் தவழ விட்டு இறையடி சேர்ந்து விட்ட எம் இசை உலக வழிகாட்டி மீரா வில்லவராயர் இழப்பினால் ஆழ்ந்த கவலையடைந்ததுடன், இலங்கை வாழ் கர்நாடக சங்கீத இசையார்வலர்களுக்கு இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய பட்டிருப்புக் கல்வி வலய இசையாசிரியர்களாகிய நாம் இறைவனைப்பிரார்த்திக்கிறோம்.
