ஏறாவூர் பற்று பிரதேச கலாசார விழாவும் நானிலம் நூல் வெளியீடும்

மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பற்று பிரதேச கலாசார விழா, கடந்த சனிக்கிழமை களுவன்கேளி கடற்கரை இறங்கு துறைமுகக் கட்டத்தில் பிரதேச செயலாளரும் பிரதேச கலாசாரப் பேரவைத்தலைவருமான உ.உதயசிறிதர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தொமிங்கோ ஜோர்ச், ஏறாவூர் பற்று-2 கோட்டக்கல்விப் பணிப்பாளர் பி.சிவகுரு ஓய்வுபெற்ற இந்து கலாசாரத்திணைக்கள கலாசாரப் பணிப்பாளர் எஸ்.தெய்வநாயகம், ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் உதவி கலாசாரப் பணிப்பாளர் எஸ்.எதிர்மன்னசிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், அதிதிகள் வரவேற்கப்பட்டதையடுத்து, உதவிப்பிரதேசசெயலாளரான திருமதி ந.முகுந்தனின் வரவேற்புரை, கலைக் காவேரி நாட்டியப்பள்ளி மாணவர்களின் வரவேற்பு  நடனம் இடம் பெற்றது. 

முக்கிய நிகழ்வுகளாக, கலாசாரப் பேரவை வெளியீடான நானிலம் நூல் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.