பவ்ரலுடன் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடலாம்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவதற்கு பவ்ரல் அமைப்பு தோர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதற்கமைய அம்பாறை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு இணைப்பாளராக கே.சத்தியநாதனை பவ்ரல் அமைப்பு நியமித்துள்ளது. 

அதேநேரம், அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை, அம்பாறை ஆகிய தேர்தல் தொகுதிகளிலும், பிரதேச ரீதியாக பிரதேச இணைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளது. 

மாவட்டததிலுள்ள சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்களும் நியமிக்கப்படவுள்ளனர். 
அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ள நடுநிலையான  இளைஞர் யுவதிகளிடமிருந்தும், ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களிடமிருந்தும் விண்ணப்பங்களை அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கோரியுள்ளார்.

விண்ணப்பங்களை தேர்தல் கண்காணிப்பு மாவட்ட காரியாலயம், சேவோ அமைப்பு, சேனைக்குடியிருப்பு கல்முனை என்ற விலாசத்துக்கோ, 0773625679 என்ற தன்னுடைய விலாசத்துக்கோ தொடர்பு கொள்ளலாம் என்றும் கே.சத்தியநாதன் தெரிவித்தார்.