கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பும்

(குளத்தூர் ரவி) 

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை (06.12.2014) பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பும் வித்தியாலய அதிபர் ச.மணிசேகரம் அவர்களது தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.


இதில் சி.இராஜேந்திரன் (பீடாதிபதி, தேசிய கல்விக் கல்லூரி, மட்டக்களப்பு) ந.உலகேஸ்பரம் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், பட்டிருப்பு வலயம்) வே.கந்தசாமி (கோட்டக் கல்விப் பணிப்பாளர், மண்முனைப்பற்று). இரா.பாஸ்கரன் (உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆரம்பக்கல்வி)  சி.புவனேந்திரன் (உதவிப் பிரதேச செயலாளர்), கிராமத்தின் கொடையாளர் கா.செந்தில்குமார், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கியதுடன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 05 மாணவர்களுக்குத் தலா ரூபா 3000ஃஸ்ரீ  பெறுமதியான காசோலைகளும் நினைவுக் கேடயமும் கா.செந்தில்குமார் அவர்களால் வழங்கப்பட்டதுடன் 2013 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி உ.நிசப்தனி கற்பித்த ஆசிரியர் திருமதி.உலகேஸ்வரம் ஞானாம்பிகை அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிக்கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.