சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு வீதி நாடகம்

(லியோன்)

பெண்களுக்கு எதிரான வன்முறையினை குறைக்கும் நோக்கில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.


சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரை அனு~;டிக்கப்பட்டுவருகின்றது.

இதன்கீழ் கண்டி பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் மட்டக்களப்பு பெண்கள் வள நிலையத்தினால் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சு சமாதான பூங்காவுடன் இணைந்து இந்த நிகழ்வு நடத்தப்பட்டுவருகின்றது.

இது தொடர்பான விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் இன்று வெள்ளிக்கிழமை புன்னைச்சோலை கலாசார மண்டப முன்றிலில் நடைபெற்றது.

கண்டி பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வலைப்பின்னல் இணைப்பாளர் திருமதி வி.சியாமிளா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வண்ணத்துப்பூச்சு சமாதான பூங்காவின் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கண்டி பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் மட்டக்களப்பு பெண்கள் வள நிலையத்தின் இணைப்பாளர் திருமதி சோமா சிவசுப்ரமணியம் உட்பட வண்ணத்துப்பூச்சு சமாதான பூங்காவின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது பெண்களுக்கு,சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை சித்தரிக்கும்  வீதி நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதுடன் அவற்றினால் பாதிக்கப்படுவோர் மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வுகளும் இதன்போது வழங்கப்பட்டன.

போருக்கு பின்னரான காலப்பகுதியில் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கண்டி பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் இலங்கையின் எட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கிளைகளினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் கடந்த வாரம் வவுணியாவில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.