அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருக்கார்த்திகை விளக்கீட்டு விசேட திருவிழா

இந்துக்களின் புனித திருக்கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட திருவிழா இன்று நடைபெற்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் திருக்கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருக்கார்த்திகை விளக்கீட்டு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.

இன்று மாலை மூலமூர்த்திக்கு விசேட அபிஸேக அலங்கார பூஜைகள் நடைபெற்று கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அபிஸேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப்பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்று சுவாமி உள்வீதியுலா இடம்பெற்றது.

வீதியுலாவினை தொடர்ந்து ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் சில பகுதிகளில் வீடுகளில் விளக்கேற்றி கார்த்தினை விளக்கீட்டை அனுஸ்டித்தனர்.