தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு கோட்டைக்கல்லாறு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் தொழில் பயிற்சி நிலையத்தில் பொது சுகாதார பரிசோதகர் கு.குபேரன் அவர்களின் ஏற்பாட்டில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சீ.கிருஸ்ணகுமார் அவர்களின் தலைமையில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பானா விழிப்புணர்வுக் கருத்தரங்கு நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் போதைப் பொருள் பாவனைக்கு இளைஞர்கள் ஆட்கொள்ளப்படும் விதங்கள் அத்தோடு; போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் உடல், உள, சமூக மற்றும் குடும்பரீதியான பாதிப்புக்கள்;, பொருளாதார ரீதியாக ஏற்படும் தாழ்வு நிலை தொடர்பாக பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சீ.கிருஸ்ணகுமார் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க.திருச்செல்வம், கோட்டைக்கல்லாறு பொது சுகாதார பரிசோதகர் கு.குபேரன் ஆகியோரால் விழிப்ப+ட்டல் வழங்கப்பட்டதுடன் அவைதொடர்பான சந்தேகங்களும் தீர்த்து வைக்கப்பட்டன.
இதில் பயிற்சி நிலைய பொறுப்பாளர் தனுஸ்குமார், போதனாசிரியர்கள் மற்றும் பயிலுனர்கள் ஆகயோர் கலந்து கொண்டனர்.