கூத்தை அறிதல்-பயில்தல்-ஆக்கல். -புதிய பரிமாணங்களில் வளர்த்தல் ஆறு மாத காலப் பயிற்சி நெறி

ஆர்வமுடைய இளம் தலைமுறையினரை கூத்‌தில்,  செயல் முறையிலும் ,கோட்பாட்டிலும், புத்தாக்கங்களிலும் பாண்டித்திய முள்ளவர்களாக்குவதைநோக்காகக் கொண்டு அரங்க ஆய்வுகூடம் ஆறு மாதகாலப்பயிற்சி நெறியொன்றினைஇலவசமாக நடத்தவுள்ளதாக பேராசிரியர் மௌனகுரு தெரிவித்தார்.

இப்பயிற்சி நெறியினை  பேராசிரியர். சி. மௌனகுரு தேர்ந்தெடுக்கப் பட்ட அண்ணாவிமார்களின் துணையுடன் நடத்தவுள்ளார்.

25 பேர்களே பயிற்சி நெறியில்  சேர்த்துகொள்ளாப் படுவர். விண்ணப்ப முடிவு திகதி 10.12..2014 விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன

கூத்தை அறிதல்-பயில்தல்-ஆக்கல்.  -புதிய பரிமாணங்களில் வளர்த்தல் ஆறு மாத காலப் பயிற்சி நெறி ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ள அறிமுக விரிவுரைகளும் பயிற்சிகளும்

முதல் கட்டம் - கூத்து பற்றிய அறிமுகமும் கூத்தின் எழுத்துப் பிரதி தயாரிப்பதற்கான பயிற்சிகளும்.

இரண்டாம் கட்டம் - கூத்தரங்கை அறிதல், ஆடப் பழகல்/பாடப் பழகல்

மூன்றாம் கட்டம் - உலகக் கூத்துக்களுக்கான அறிமுகம்.

 நான்காம் கட்டம் - கூத்தில் புதிய ஆக்கம்.

 ஐந்தாம் கட்டம் - கூத்தைப் பல பரிமாணங்களுக்கு வளர்த்தெடுத்தல்.
 இக்கட்டங்கள் முறையே,

ஜனவரி- (2015) மார்ச்-    (2015) மே-      (2015) ஜூலை_  (2015) செப்டெம்பர்_(2015) நவம்பர்-   (2015)  மாதங்களில் நடைபெறும்.

 பயிற்சி நடாத்துனர் - சி.மௌனகுரு

 நடைபெறும் இடம் - அரங்க ஆய்வு கூடம்,9 கொலட்லேன், மட்டக்களப்பு.

 பயிற்சியின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாவிமார்களுடனான கலந்துரையாடல்களும் காலம் சென்ற பிரபல்யமான அண்ணாவிமார்களுடன் (உதாரணம்- நாகமணிப்போடி, செல்லையா, நோஞ்சிப்போடி, நல்லலிங்கம்) 1996 ஆம் ஆண்டுகளில் நடாத்திய உரையாடல்களின் காணொளிக் காட்சிகள் இடம்பெறும்.

முதல் கட்டம்

கூத்துப் பற்றிய அறிமுக விரிவுரைகளும் கூத்துப் பிரதி தயாரிப்பதற்கான பயிற்சிகளும்.

(இது ஒரு மாத காலப் பயிற்சி நெறி) காலம் 03.01.2015 – 10.01.2015 வரை
 பயிற்சி தரும் காலங்கள்

03.01.2015 சனி – காலை 9.00 – 132.00 (3மணிநேரம்)
10.01.2015 சனி – காலை 9.00 – 12.00 (3மணிநேரம்)
14.01.2015 சனி – காலை 9.00 – 12.00 (3மணிநேரம்)
21.01.2015 சனி – காலை 9.00 – 12.00 (3மணிநேரம்)
28.01.2015 சனி – காலை 9.00 – 12.00 (3மணிநேரம்)  மொத்தம் 15 மணி நேரம்

  முதல் கட்ட பயிற்சியின் உள்ளடக்கம்

1. கூத்து ஓர் அறிமுகம் 2. மட்டக்களப்பில் கூத்துக்கள் 3. கூத்தும் சமூகமும் 4. கூத்தின் வடிவம் 5. கூத்தின் பாடல் வகை 6. கூத்தின் ஆடல் வகை 7. யாப்பிலக்கணம் (அறிமுகம்)  8. கூத்து எழுத்துப் பயிற்சி
விண்ணப்பிப்பதற்கான தகமைகள்
________________________________--
1. 18 வயதுக்கு குறையாத வயது
2. கூத்தில் ஆர்வம்
3. தவறாது கலந்து கொள்ளும் பண்பு
4. அர்ப்பணிப்பு
5. உழைப்பு
6. பாட்டுக்கள் அமைக்கவும், ஆடவும் பாடவுமான அடிப்படைத் திறன்கள் (ஓரளவு இருப்பின் போதுமானது)

விண்ணப்பக் கடிதங்கள் 10.12..2014 க்குப் பிந்தாமல், சி.மௌனகுரு, 45/19 2ம் குறுக்கு, சின்ன உப்போடை வீதி, மட்டக்களப்பு எனும் விலாசத்துக்கு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பப் படிவங்களை 05..12. 2014 -10.12.2014 வரை இல-9 கொலட்லேனில் உள்ள அரங்க ஆய்வு கூடத்தில் தினமும் மாலை 4.00-6.00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். அல்லது நீங்களே தயாரித்து அனுப்பலாம். தெரியப்படுபவர்களுக்கு அழைப்புக் கடிதம் 25.12.2014 முன்னர் உங்கள் விலாசங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

திறமையின் அடிப்படையில் 25 பேர் தெரிவு செய்யப்பட்டு-2015இல் 6 மாதப்.பயிற்சியளிக்கப்படும். இப்பயிற்சிநெறிக்கு எந்தவித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது.