மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் மிகவும் மோசமான நிலையில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மகநெகும திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இது தொடர்பில் ஆய்வுகளையும் அப்பகுதிகளின் நிலைமைகளையும் ஆராயும் வகையில் மகநெகும வீதி திட்டமிடல் அதிகாரி கிங்ஸ்லி ரணவக்க வவுணதீவு பிரதேசத்துக்கு விஜயம் செய்தார்.
வவுணதீவு பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் ஜெகனின் வேண்டுகோளின் அடிப்படையில் இவர் விஜயத்தினை மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுள ,வாழைக்காலை ,சில்லிக்கொடியாறு ஆகிய கிராம சேவை பிரிவுகளுக்கு சென்று வீதிகளை பார்வையிட்டார்.
இதன் போது இக்கிராம மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர் . இதன்போது இவர்களின் கோரிக்கைகளை ஏற்று இதனை நிறைவேற்றி தருவதாக கூறினார்.