மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கௌரவிப்பு நிகழ்வு

(லியோன் )

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தேசிய ரீதியிலும் மாகாண ரீதியிலும் நடைபெற்ற உற்பத்திறன் போட்டியிலும்,மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் நடைபெற்ற விளையாட்டு நிகழ்விலும் கலந்துகொண்டு வெற்றியீட்ட உழைத்த அனைத்து உத்தியோகத்தர்கள் ,ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில்  வைத்தியர் எஸ் .சதுர்முகம் தலைமையில் இன்று நடைபெற்றது.


இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய பணிமனை வைத்திய அதிகாரிகள் , பணிமனை உத்தியோகத்தர்கள் , தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பிராந்திய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிராந்திய பணிப்பாளர் பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் கடந்த கால சேவைகள் , வேலைத்திட்டங்கள் மற்றும் சேவை அர்பணிப்புகள் தொடர்பான ஒலி  ஒளி வீடியோ காட்சிகள்  காண்பிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .