வாகரையில் வெள்ளம் காரணமாக சில பகுதிக்கான போக்குவரத்துகள் துண்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்வரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளின் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன.


வாகரை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டுமுறிவு மற்றும் தோணிதாண்டமடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும்; பிரதான வீதிகளில் வெள்ள நீர் பாய்வதனால் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கா.பொ.சாதாரண தர பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் இப்பகுதிகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பரீட்சைக்கு செல்லவுள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீதிகளில் சுமார் நான்கு அடிக்கு மேல் நீர் பாய்வதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இதேநேரம் இன்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெள்ளத்தின் மத்தியில் கட்டுமுறிவுக்கு சென்று அப்பகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடினார் .

அத்துடன் கட்டுமுறிவில் இருந்து கதிரவெளிக்கு கா.பொ. த.சாதரண தர பரீட்சைக்கு செல்லவிருந்த மாணவர்களையும் அழைத்துச்சென்று உதவியமை குறிப்பிடத்தக்கது.