கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்கு விசேட திறமைகள் சான்றிதழ்

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நாடளாவியரீதியில் நடைபெற்ற தேசிய  உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடர் 2012ஃ2013இல் மட்டக்களப்பு - கோறளைப் பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகம் விசேட திறமைகள் சான்றிதழினைப் பெற்றுக் கொண்டது.


இவ் சான்றிதழ் வழங்கும் வைபவம்  உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷர்  சேகுதாவுத் தலைமையில் அண்மையில், பத்தரமுல்லையிலுள்ள செத்சிரிபாய கட்டிட பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் .அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க  மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

தேசிய உற்பத்திதிறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் முதல் தடவையாக பங்குபற்றியதுடன் பங்குபற்றிய முதல் வருடத்திலேயே இவ் விசேட திறமைக்கான சான்றிதழினை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.