இந்நிகழ்வில் கிழக்கிலங்கையின் பிரபல தமிழ் ஆசான் எஸ்.எஸ்.அமல் மற்றும் பலர் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இக்குறுந்திரைப்படத்தை இயக்குனர் ரொஷான் வெளியிட்டார்.
இத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் செல்வா, இமிலியன் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டனர்.
இக்குறுந்திரைப்படத்திற்கு பிரணீவ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பினை செய்ய செந்தூரன் இசை அமைத்துள்ளார். இப்படத்தினை விழாவில் கலந்து கொண்ட பலரும் கண்டுகளித்தனர்.







