பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் உணர்வுபூர்வமான சுனாமி நினைவு தின நிகழ்வு

(புருசோத்)

சுனாமி அனர்த்தத்தின் 10 வதுஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடத்தும் நினைவு தின நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.


வெள்ளிக்கிழமை காலை பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்துக்கு முன்பாக மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ரி.விவேக்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சுனாமி அனர்த்தம் காரணமாக நாட்டில் உயிரிழந்த அனைவருக்கும் தீபம் ஏற்றப்பட்டு அஞ்சலி செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் கழக உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.