மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நீர்வழங்கல் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த நீர்விநியோக நடவடிக்கைகளுக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
வவுணதீவு பிரதேசத்தில் உள்ள பிரதான நீர்வழங்கல் நிலையத்தில் இருந்து பட்டிப்பளை பிரதேசத்துக்கான இந்த திட்டம் இணைக்கப்படவுள்ளது.
இதன் ஆரம்ப பணிகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று புதன்கிழமை கொக்கட்டிச்சோலையில் உள்ள பிரதேசசபைக்கு முன்பாக ஆரம்பித்துவைத்தார்.
இந்த நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் விநோதன்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,பொதுமக்கள் தொடர்பாளர் பேரின்பமலர் மனோகரதாஸ் மற்றும் பட்டிப்பளை பிரதேச சபையின் செயலாளர் கிருஸ்ணபிள்ளை,முன்னாள் தவிசாளர் பேரின்பராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த குடிநீர் விநியோக வேலைத்திட்டத்துக்கு சுமார் 800மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
குறித்த நீர் வழங்கல் வேலைத்திட்டங்கள் எதிர்வரும் வைகாசி மாதம் பூர்த்திசெய்யப்படும் எனவும் இதனால் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 24 கிராம சேவையாளர் பிரிவு மக்கள் நன்மையடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோடை காலத்தில் இப்பகுதிகளில் உள்ள கிணறுகள் வற்றிவிடுவதனால் குடிநீர் பெறுவதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.