பறங்கியர் சமூக பிள்ளைகளுக்கு படையினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

(லியோன் )   
     
இராணுவத்தின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள பறங்கிய சமூகத்தின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.


கிழக்குமாகான  பாதுகாப்பு  கட்டளை தலைமை அலுவலக அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு 12வது பாதுகாப்பு படை கஜபா படைப்பிரிவின்  அணியின்  அனுசரணையில்  பறங்கியர் சங்க உறுப்பினர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு இவை வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி பேர்டினன் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  கிழக்கு மாகாண  பாதுகாப்பு கட்டளை தலைமை அதிகாரி மேஜர்  எஸ் .எ .எ .எல் .பெரேரா ,23வது பாதுகாப்பு பிரிவு கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஹெட்டிஹாராச்சி , 231வது பாதுகாப்பு பிரிவு கட்டளை அதிகாரி பிரிகேடியர் எச் .பி .பி .பெர்னாண்டோ ,12 வது பாதுகாப்பு பிரிவு கஜபா ரெஜமெந்து இரண்டாவது கட்டளை அதிகாரி மேஜர் எச் .பி எ .சேனாரத்ன மற்றும் அருட்பணி நோட்டன் ஜோன்சன்    ,பறங்கியர் சங்க உறுப்பினர்கள் ,பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பறங்கியர் பாரம்பரிய கலாச்சார நடன நிகழ்வுகள் , கலாச்சார மொழியிலான பாடல்கள்  இடம்பெற்றதுடன்  நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது .