கிரான்குளத்தில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார அலுவலகம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினை ஆதரிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டுவருகின்றன.


இதன் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிரான்குளத்தில் தேர்தல் அலுவலகம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் திறந்துவைக்கப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த அலுவலக திறப்பு விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினை ஆதரிக்கும் வகையில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.