களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி லால்சேன,களுவாஞ்சிகுடி பிரதேச வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் பணிப்பாளர் வரதராஜன் ,மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் சத்தியவரதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சுமார் 600குடும்பங்களுக்கு வாழ்வின் எழுச்சி திணைக்களம் ஊடாக வீடுகளை புனரமைப்பதற்கான நிதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இதற்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சுமார் 17 இலட்சம் ரூபாவினை துறைநீலாவனை கிராமத்துக்காக ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
10ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதுடன் முதல் கட்டமாக 2500ரூபா வழங்கப்பட்டுவருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.








