கரடியனாறு மகா வித்தியாலயத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

(குளத்தூர் ரவி) 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கரடியனாறு மகா வித்தியாலயத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வித்தியாலய அதிபர் இ.செந்தில்நாதன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் க.சத்தியநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் கரடியனாறு பொலிஸ் அதிகாரி மகாலேக்கம் மற்றும்  திருவள்ளுவர் சிலையை நிர்மாணித்து அன்பளிப்பு செய்த பொன்னுத்துரை விஜயகாந்தன் அவரது தாய் திருமதி நேசமலர் பொன்னுத்துரை அவரகளதும் மற்றும் குறித்த சிலைக்கு சுற்று வேலியமைத்து கொடுத்த பழய மாணவர்கள்,சமயப் பெரியார்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.