இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டும் பரிசளிப்பு விழாவும்

(குளத்தூர் ரவி) 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டும் பரிசளிப்பு விழாவும் வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்றது.


இதில் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கே. சத்தியநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கே.ஹரிகரராஜ் (பிரதிக்கல்வி பணிப்பாளர் முகாமைத்துவம்) எஸ்.ரமேஸ் (பிரதம கணக்காளர் மாகாண திறைசேரி கிழக்கு மாகாணம்) ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டனர்.

மேலும் சமயப் பெரியார்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள்,கிராம மக்கள் என் பலரும் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கு பரிசுகளும், வெற்றிக் கேடயமும் வழங்கிக் கௌரவித்தனர்.

அது மட்டுமின்றி மாணவர்களின் கலை நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றது.