பாவற்கொடிச்சேனை பிரதேச திவிநெகும பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு

வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான மேலதிக கொடுப்பனவாக வீடுகளை திருத்துவதற்காக 10ஆயிரம் ரூபாவினை வழங்கும் வகையில் முதல் கட்டமாக 2500 ரூபா வழங்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


மட்டக்களப்பு,வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் திவிநெகும பயனாளிகளுக்கான வீடு புனரமைப்புக்கான நிதிவழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

வவுணதீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் நிர்மலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன்,பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,மக்கள் தொடர்பாடல் அதிகாரி பேரின்பமலர் மனோகரதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இப்பகுதிகளில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 800 பயனாளிகளுக்காக 30இலட்சம் ரூபா நிதி வழங்கிவைக்கப்பட்டது.