இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நடாத்தப்படவுள்ளது.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் நினைவு தின நிகழ்வின் போது நல்லூர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் கந்தையா நீலகண்டன், கிழக்குப் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் ச.முகுந்தன், கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.சாந்தி கேசவன், கொழும்பு வலய ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஹேமா சண்முகசர்மா, கல்லடி காயத்திரி பீட பிரதமகுரு சிவயோகச் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார், அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் மு.கதிர்காமநாதன் ஆகியோரின் ஆறுமுகநாவலர் சிறப்புரை இடம்பெறும்.
அத்தோடு சிவத்தொண்டர் பயிற்சி நெறி நிகழ்வின் போது மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி சதுர்பு ஞானாந்தஜி மகராஜ், அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் விடை கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலா, கிழக்குப் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் ச.முகுந்தன், கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் கலாநிதி ம.பாலகைலாசநாத சர்மா, கொழும்பு வலய ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஹேமா சண்முகசர்மா ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளது.
எனவே இந்நிகழ்வுக்கு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை உயர்தர மாணவர்கள், இந்து அமைப்பு பிரதிநிதிகள், ஆலய தர்மஹர்த்தா சபையினர் மற்றும் இந்து சமய ஆர்வாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர்.
