கிழக்கு மாகாணசபை ஒத்திவைக்கப்பட்டது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை அரசியலில் யாருமே எதிர்வு கூறாத, யாருமே எதிர்பாராத திருப்பம் மாபெரும் சுனாமி பேரலையைத் தோற்றுவித்துள்ளது. இந்தப் பேரலையின் தாக்கம் அசைக்க முடியாது என்று நம்பிய பலமான அத்திவாரத்தையே அசைத்து விட்டது போன்ற தோற்றத்தை தெளிவாக உணர்த்தி விட்டது.
ஊவா மாகாண சபை தவிர்க்கமுடியாத குளிரால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, மேல் மாகாண சபை உறுப்பினர்களின் ஆவேச உரைகளின் உஸ்ணம் தாங்க முடியாது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, கிழக்கு மாகாண சபையோ ‘செவ்கோல்’ காரணம் காட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காரியத்துக்கு காரணம் கூற முடியாது என்பதே யதார்த்தம். உண்மையில் ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட இடப் பெயர்வு அச்சம் அவர்களது பேரம் பேசல்களின் கடினத்தன்மை, இவற்றை தடுக்க, தவிர்க்க முடியயாத ‘கையறு’ நிலையே இதற்கான உண்மைக்காரணம் என்பதே திறந்த இரகசியம்.
என்னவோ, எப்படியோ, எவ்வாறோ தற்போதைய கள நிலவரம் மத்தியிலும் மற்றும் மேல், ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், மற்றும் தவிர்க்க முடியாது என்பதையும் மாற்றத்தை தள்ளி வைக்க மாத்திரமே முடியும் என்பதையுமே உணர்த்துகின்றது. தள்ளி வைக்கும் முயற்சி கூட காலம் கடந்த ஞானம் போலவே தெரிகின்றது.
நடக்கும் சம்பவங்கள் நமக்கு கிதாசாரத்தையே ஞாபகப்படத்துகின்றது. அதுதான் “ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” போலவே தெரிகிறது. நம்பிக்கை ஒன்றுதானே நம் வாழ்வின் ஒளிக்கின்றது.
