போரதீவுப்பற்றில் 3000 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் விநியோகிக்கும் பணிகள் இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உடனடி உத்தரவுக்கமைய அடிப்படையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இதனை ஆரம்பித்துவைத்தார்.

இதன் கீழ் பெரியபோரதீவு, முனைத்தீவு, பட்டாபுரம், கோவில்போரதீவு, கோவில்போரதீவு தெற்கு,கோவில்போரதீவு மேற்கு ஆகிய பகுதிகளுக்கான உலர் உணவுப்பொருட்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இப்பகுதியில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் 3000ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

சீனி,அரசி,மீன்டின் உட்பட 1500ருபா பெறுமதியுடைய உலர் உணவுப்பொதிகள் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இதன்போது போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கு இந்த உலர் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.