மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 7203 குடும்பங்களைச் சேர்ந்த 24985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனதாக பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய நிலையில் கதிரவெளியில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 226 பேர் நலன்புரி நலையத்தில் தங்கியுள்ளனர்.
அதே நேரம், 7121 குடும்பங்களைச் சேர்நத 24654 பேர்இடம் பெயர்ந்து உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
அதே தேநம் வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவில் 738 வீடுகள் முழு அளவில் சேதமடைந்துள்ளதாகவும் பிரதேச செயலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.