மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள சமுர்த்தி உதவிபெறும் பயனாளிகளுக்காக இந்த நிதிகள் வழங்கப்படவுள்ளன.
இதன்கீழ் வீடுகளை புனரமைப்பதற்கு தலா 2500 ரூபா வீதம் 79125 குடும்பங்களுக்கான கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களில் வறுமை நிலையில் உள்ள சமுர்த்தி உதவி பெறும் 8560 குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இது தொடர்பான நிகழ்வு இன்று பிரதேச செயலகத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் கே.குணரெட்னம்,உதவி பணிப்பாளர் மனோகிதராஜ்,வாழ்வின் எழுச்சி திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் புளியந்தீவு,திருப்பெருந்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சமுர்த்தி உதவிபெறும் 1500 பேருக்கான வீடுகளை புனரமைப்பதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.


















