சுகாதார அமைச்சின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவக் குழாம் இச்சிகிட்சை முகாமை நடாத்தியது.
நாளை செவ்வாய்க்கிழமை (25) முதல் இரண்டு வாரங்கள் வரை இன்று தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான சத்திரசிகி;சை நடைபெறும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைப் பிரிவின் வைத்திய அதிகாரி கே. ஜெயசுதன் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் இப்ராலேப்பை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைத்தியர்கள்,தாதியர்கள் கலந்துகொண்டனர்.
மருத்துவக் குழுவில் சத்திரசிகிட்சை நிபுணர்களான ஜேம்ஸ் சவுந்திரா மற்றும் பீட்டர் கேவோட், மயக்க மருந்து கொடுக்கும் வைத்தியர்களான நரின்டா டீ மெல் மற்றும் பெனலோப் குளுஸ் ரோஸ், தாதியர்களாக கிலன் பத்தகே, ஜெனீபர் பெர்னன் ஆகியோரோடு பிளாஸ்டிக் மீள்கட்டமைப்பு சத்திர சிகிட்சை நிபுணர்களான எச்.ஏ.எஸ். ரட்னாயக்கா மற்றும் சாந்தினி பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிகிச்சை தேவை எனக் கருதும் 150க்கும் மேற்பட்டவர்கள் இம்முகாமில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.