மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் உண்டியலை உடைத்துகொள்ளையிட்டவர் கையுமெய்யுமாக பிடிபட்டார்

(லியோன்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவரை கையுமெய்யுமாக பொலிஸார் பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கையில்,

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோயில் வளாகத்தில் காவல் ரோந்து நடவடிக்கையில் இருந்த போது  கோயிலினுள் ஏற்பட்ட சத்தத்தின் காரணமாக கோயிலினுள் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அதன்போது  நபர் ஒருவர் உண்டியலை உடைத்துகொண்டிருப்பதை அவதானித்த பொலிசார் அவரை கையுமெய்யுமாக பிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் குறித்த நபரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட  23,642 ரூபா கைப்பற்றியதாகவும் பொலிசார் தெரிவித்தனர் .

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .