பூகோளமயமாகும் பொருளாதாரங்களில் கல்வியும் கல்விக் கூடங்களும் எனும் கருப்பொருளிலாலான கருத்தாடற் களம் நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரசபை மண்டபத்தில் தமிழ் சங்கத்தின் தலைவர் கலாபூசணம் எதிர்மன்னசிங்கம் தலைமையில் இன்று (23) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கள நாயகனாக அவுஸ்திரேலிய முர்டாஜ் பல்கலைக்கழகத்தின் சிரே~;ட விரிவுரையாளர் கலாநிதி அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன் சிவில் சமுக தலைவர் மாமாங்கராஜா ஆகியோருடன் தமிழ் சங்க உறுப்பினர்கள் பாடசாலை மாணவ மாணவிகள் கலைஞர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இன்றைய பூகோள மயமான உலகில் கல்யின் நிலை எவ்வாறு இருக்கின்றது அதற்காக மாணவர்கள் எவ்வாறு அக்கல்வி நிலையை சமாளித்து செயற்பட வேண்டும் என்பது பற்றிய கருத்தாடல் அமீர்அலி அவர்களால் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.