இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் பொலநறுவை மாவட்ட இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடைபெற்;ற தேவாரம் , பண்ணிசை பேச்சுப் போட்டிகளில் வெற்றியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை (21.11.2014) பி.ப 3.00 மணிக்கு மாவட்ட இந்து சமயகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆ.லெவ்விதன் தலைமையில் கறப்பளை ஹெயன்பிட்டி தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பொலநறுவை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பவாசீலி ஜயலத் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பொலநறுவை மாவட்ட உதவிமாவட்ட செயலாளர் ரங்ஹாணி, வெலிக்கந்தை பிரதேசசெயலக கணக்காளர் வு.மதன் பொலநறுவை மாவட்ட நிருவாக உத்தியோகத்தர் திஸ்ஸதயாரத்ன, வெலிக்கந்தை பிரதேசசபை உறுப்பினர் விவேகானந்தராஜா மற்றும் வித்தியாலய அதிபர் திருமதி மு.கோமளம் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் அதிதிகள் உரையும் இடம்பெற்றது.
இதன்பின் போட்டியில் வெற்றியீட்டிய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நவராத்திரி தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கே இந்த பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.






