மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இவை சந்திவெளி கிராமத்தலைவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு சந்திவெளி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பேரின்பமலர் மனோகரதாஸ் மற்றும் பிரதியமைச்சரின் ஊடாக இணைப்பாளர் ஜீவானந்தன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
சந்திவெளி –திகிலிவட்டைக்கான போக்குவரத்துகள் சந்திவெளி ஆற்றின் ஊடாக நடைபெற்றுவருகின்றது.
படகு சேவை மூலம் இடம்பெற்றுவரும் இந்த போக்குவரத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த உயிர்காப்பு அங்கிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்துவரும் நிலையில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்துள்ள நிலையில் இந்த பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களின் பயணம் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
உயிர்காப்பு அங்கிகள் மிகவும் அவசிமான சூழ்நிலையில் இது தொடர்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இவை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.










