மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தர பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா மற்றும் மட்டக்களப்பு சுகாதார திணைக்களத்தின் உதவி சுகாதார வைத்திய அதிகாரி செல்வி கீர்த்திகா மதனழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 36 பாடசாலைகளில் இந்த சுகாதார கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து பாடசாலைகளில் இந்த சுகாதார கழகங்களை அமைத்துள்ளன.
சுத்தம் சுகம் தரும் என்று தூரநோக்குடன் உடல்நள ஆன்மீக சுகாதாரத்தினை செயற்பாடுகளின் ஊடாக கடைப்பிடித்து ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்கும் நோக்குடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.
இதன்மூலம் பாடசாலை பருவங்களில் சுகாதாரத்தின் முக்கியத்துவம் உணரப்படும்போது சிறந்த சுகாதார நலன் கொண்ட சமூதாயத்தினை உருவாக்கும் நோக்குடன் இந்த சுகாதார கழகங்கள் செயற்பட்டுவருகின்றது.
இதன்கீழ் சிறந்த முறையில் செயற்பட்ட கழகங்கள் தெரிவுசெய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குழுக்களாக செயற்பட்ட மாணவர்களும் இதன்போது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



















