மகாஜன கல்லூரியில் ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்வும் மற்றும் பிரியாவிடை நிகழ்வும்

(லியோன்)

மட்டக்களப்பு மகாஜன கல்லூரி ஆசிரியர்களின் நலன்புரிச் சங்கத்தினால் நடத்தப்பட்ட   ஆசிரியர்களை வரவேற்கும்  நிகழ்வும் மற்றும் பிரியாவிடை நிகழ்வும்  கல்லூரியில்  இடம்பெற்றது .

இக் கல்லூரிக்கு நியமனம் பெற்று வருகை தந்துள்ள புதிய ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்வும் , இக் கல்லூரியில் சேவை ஆற்றி  இடம்மாற்றம் பெற்று சென்ற ஆசிரியர்களை  கௌரவிப்பும்  மற்றும் பிரியாவிடை நிகழ்வும் கல்லூரி அதிபரின் தலைமையில் இன்று கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது .

இங்கு இடம்பெற்ற நிகழ்வில் கல்லூரி அதிபர் ,  ஆசிரியர்கள் ,வருகை தந்துள்ள புதிய ஆசிரியர்கள் மற்றும் இடமாற்றம் பெற்று சென்றுள்ள ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இன்று இடம்பெற்ற நிகழ்வில் ஆசிரியர்களின் சேவை காலத்தில் ஆற்றிய சேவைகள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் இந்நிகழ்விலே இவர்கள் பாராட்டு பெற்றமை குறிப்பிடத்தக்கது.