மட்டக்களப்பு மாவட்டத்தில் தாய் தந்தையரைத் தேடிக்கண்டுபிடிக்கும் திட்டம்

பெற்றோரை இழந்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் தங்கியுள்ள பிள்ளைகளின் தாய் தந்தையரைத் தேடிக்கண்டுபிடிக்கும் திட்டத்தினை விரைவு படுத்துதல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டங்கள் மட்டக்களப்பு,மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.


கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தைத் திணைக்கள ஆணையாளர் தலைமையில் இக் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளிக்கிழமை (07) மாலை முதல் இத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான கூட்டம் ஒன்று மட்டக்களப்பு சிறுவர் நன்நடத்தைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இக்க லந்துரையாடல் மட்டக்களப்பிலுள்ள சிறுவர் இல்ல முகாமையாளர்கள், நிருவாகிகள், சிறுவர் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்டது.

இதன் போது, மட்டக்களப்புசிறுவர் நன்நடத்தைக் காரியாலய பொறுப்பதிகாரி எம்.வரதராஜன், தலைமைக்காரியாலய ஆலோசகர் எஸ்.ரவிச்சந்திரன், தலைமைக்காரியாலய உத்தியோகத்தர் அனுஸ்கா ஹேமந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் போது, கிழக்கு மாகாணம் பு}ராகவும், 750க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பெற்றோர்கள் இன்றி சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் தாய் தந்தையர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், குடும்ப மீள் இணைவு உள்ளிட்ட பல்வேறு விடங்கள் கலந்துரையாடப்பட்டன.