மட்டக்களப்பு செலான் வங்கியின் ஏற்பாட்டில் புலமைப்பரிசில் சித்தயடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா நேற்று மகாஜனா கல்லூரி மண்டபத்தில் முகாமையாளர் திருமதி பத்மஸ்ரீ இளங்கோ தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி திருமதி நவரெட்ணராஜா, கௌரவ அதிதிகளாக புனித மிக்கேல் கல்லூரி அதிபர் திருமதி எஸ்.மாசிலாமணி, பிரதி அதிபர், மெதடிஸ்த மத்திய கல்லூரி பிரதி அதிபர் பயஸ் ஆனந்தராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் போது, மட்டக்களப்பு செலான் வங்கியில் கணக்குகளைப் பேணும் புலமைப்பரிசில் பபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்குப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிடையே நாடு பூராகவும் செலான் வங்கியால் நடத்தப்பட்ட போட்டிச் சீட்டிழுப்பில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.