மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய எல்லை வீதி சின்ன ஊறணியில் உள்ள வீட்டின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த கொள்ளையிடப்பட்டுள்ளது தொடர்பில் முறையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 40ஆயிரம் ரூபா பணம் மற்றும் மோதிரம் ஒன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரினால் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
