nnnஇக் கிராமங்களைச் சேர்ந்த மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிச்சினைகள் உள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம்மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
கொட்டும் மழையில் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவில் ஒன்று கூடிய இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பேரணியாக மாவட்ட செயலகத்திற்கு வந்து அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
மறுமலர்ச்சிப் பெண்கள் அமைப்புகளின் ஏற்பாட்டிலும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒத்துழைப்புடனும் இந்த பேரணி நடைபெற்றிருந்தது.
இதன்போது மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், செல்வராஜா, மாகாண சபை உறுப்பினர்களான துரைராஜசிங்கம், பிரசன்னா, நடராஜா, வெள்ளிமலை ஆகியோர் இந்த மக்களுடன் உரையாடி, மீண்டும் அரசாங்க அதிபரிடம் மேலும் விரிவாக தங்களுக்குள்ள யானைப்பிரச்சினை, வீடுகள் இன்மை, குடிநீர்ப்பிரச்சினைகள், போக்குவரத்துப்பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். அதன் போது மக்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறினர்.
இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில்,
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கித்துள், சர்வோதைய நகர், உறுகாமம், தும்பாலஞ்சோலை, கோப்பாவெளி, வெலிக்காண்டி, ஆகிய கிராமங்களில் குடுமு;ப தலைமைத்துவப் பெண்களை உள்ளடக்கிய மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
இப் பெண்கள் அமைப்பு தலைமைத்துவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்ந்த மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகவும் செயற்பட்டு வருகிறது. யுத்த அனர்த்தத்தினால் எமது உறவுகளையும் உடமைகளையும் இழந்து (கித்துள், தும்பாலஞ்சோலை, வெலிகாகண்டி, சர்வோதயநகர், கோப்பாவெளி, உறுகாமம் )போன்ற கிராமங்களை விட்டு இடம்பெயர்ந்து 2007ம் ஆண்டு எமது கிராமங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட்டோம்.
மீளக் குடியமர்த்தப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை, யானைப்பிரச்சினை, குடிநீர்ப்பிரச்சினை, வீட்டு வசதியின்மை, வீதி சீரின்மை, மலசலகூட வசதியின்மை, காணி அனுமதிப்பத்திரமின்மை எனப் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறோம். இப்பிரச்சினைகளைத் தீர்த்துத் தருவதற்கு ஆவன செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் மகஜரின் பிரதிகள் , மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.


