இந்தப் படகு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின்;; வேப்பவெட்டுவான் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள மாவடியோடை - காரைக்காடு பாலங்களுக்கு இடையில் வெள்ள அனர்த்த காலத்தில் பாதைத்துண்டிப்பின்போது பயன்படுத்தப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.
மேலும், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முருங்கன்தீவு, சாராவெளி, பூலாக்காடு, பிரம்படித்தீவு, அம்புஸ்குடா உள்ளிட்ட மக்களின் போக்குவரத்துக்காக 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 25 குதிரைவலுக்கொண்ட இயந்திரம், படகு, பாதுகாப்பு அங்கிகளையும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு செவ்வாய்க்கிழமை (25) கையளித்தது.
இதன் காரணமாக வாழைச்சேனை மக்கள் கிண்ணையடி ஆற்றின் ஊடாக செய்யும் பாதுகாப்பற்ற பயணம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
